tamilnadu

img

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருப்பூர், ஜூலை 26-  திருப்பூர் அருகே நான்கு வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயி ரிழந்த சம்பவம் அப்பகுதி மக்க ளிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. திருப்பூர் வாவிபாளையம் அரு கேயுள்ள  படையப்பா நகரைச் சேர்ந்த வர் நடேசன். பனியன் தொழிலாளி. இவரது மகன் லோகேஷ் (4). கடந்த 14 ஆம் தேதியன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லோகேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், காய்ச்சல் சரியாகாததால் கோவையில் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார். இதனிடையே  படையப்பாநகர் பகுதியில் குடிநீர், சாக்கடை என  எந்த அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தாலேயே நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், சிறுவனின் உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டியும், படையப்பா நகரில்  அடிப்படை வசதி களை செய்து தரக்கோரியும்  ஊத்துக் குளி சாலையில் வெள்ளியன்று அப் பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் முடிவுக்கு வந்தது.