சென்னை, ஜன.25- தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல்துறையினருக்கு குடி யரசுத் தலைவர் பதக்கங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநி லங்களைச் சேர்ந்த காவல்துறை யினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன. இதில், தமிழகத்தில் சிலைத் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலை வரின் சிறப்புப் பதக்கங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகர காவல் ஆணை யர் செந்தில்குமார் உள்ளிட்ட 21 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த பதக்கம் அறி விக்கப்பட்டுள்ளது.