tamilnadu

img

சென்னையில் 22 பேர் பலி

சென்னை, ஜூன் 16- சென்னையில் கொரோனா வுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 15 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 382 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் திங்களன்று இரவு முதல் செவ்வா ய்க்கிழமை காலை 9 மணி வரை யிலும் கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் 3 பேரும் உயிரிழந்துள் ளனர். மேலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை யில் 4 பேரும், தனியார் மருத்துவ மனைகளில் தலா 3 பேரும் உயி ரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா வால் பாதிக்கப்பட்டு குணமடை வோரின் எண்ணிக்கை அதிகரித்தா லும் உயிரிழப்பும் அதிகரித்து வரு வது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.