அமிர்தசரஸ்:
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் ஏற்பட்டமோதல் காரணமாக, அம் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா கடிதம் மீது கடந்த5 நாட்களுக்கும் மேலாக முடிவு எதையும் எடுக்காமல் இருந்துவந்த முதல் வர் அம்ரீந்தர் சிங், தற்போது சித்துவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.