tamilnadu

img

அரசுப் பள்ளியை மூடி விட்டு நூலகமாக மாற்ற எதிர்ப்பு கிராம மக்களின் முயற்சியால் மீண்டும் திறப்பு

அறந்தாங்கி, ஆக.13- தமிழகத்தில் மாணவர்கள் எண் ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளி கள் மூடப்பட்டு அந்த கட்டிடங்கள் நூல கமாக செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அரசு பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை குறை வாக உள்ளது என்று அறிவித்து அங்கி ருந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு பள்ளிகள் பூட்டப்பட்டன. அதில் அறந்தாங்கி வட்டம் குளத் தூர் அரசு தொடக்கப்பள்ளி இந்த ஆண்டு பள்ளி திறந்த போது ஒரு மாண வர் மட்டுமே இருந்த நிலையில் பள்ளி யை மூடி விட்டு நூலகமாக மாற்ற ஏற்பாடு செய்வதாக கல்வித் துறை அதிகாரிகள் கிராமத்தினரிடம் தெரி வித்தனர். அதிர்ச்சி அடைந்த கிராமத்தி னர் பள்ளியை மூடினால் மாண வர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதி வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் தனியார் பள்ளிக்கு அனுப்பும் மாணவர்களின் பெற்றோர் கள் மற்றும் மாணவர்களிடம் பேசி சம ரசம் செய்து 11 மாணவர்களுடன் திங் கள் காலை பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.  கல்வி துறை அதிகாரிகளிடம் பதி னோரு மாணவர்களையும் சேர்த்து பள்ளியை திறக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்து வோம் என்று தெரிவித்தனர். கல்வி துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்த னர். அப்பொழுது மாவட்ட கல்வி அலு வலர் திராவிடச் செல்வம் சென்னை யில் உள்ள கல்வி துறை அதிகாரி களை தொடர்பு கொண்டு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அரசின் உத்தரவுபடி கடந்த 9ம் தேதி பள்ளியை மூடுவதாக அறிவித்தோம்.  ஆனால் தற்போது 11 மாணவர்களு டன் பெற்றோர்கள் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் என்று தெரிவித்த நிலை யில் மாணவர்களின் எண்ணிக்கை கூடு தலாக இருந்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மீண்டும் செயல்பட ஏற்பாடு செய்யுங்கள் என்று சென்னை கல்வி துறை அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்த நிலையில் மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் முன்னிலை யில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியது. கிராம மக்களின் முயற்சியால் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.