பொன்னமராவதி, பிப்.11- புதுக்கோட்டை பொன்னம ராவதி பேருந்து நிலையம் அரு கில் உள்ள வாரச்சந்தை வாரம் இருமுறை கூடுகிறது. சுற்று வட்டார 42 கிராம ஊராட்சி மக்கள் இங்கு காய்கறி உள்ளிட்டவை வாங்குவதற்கும் விற்பதற்கும் கூடுகின்றனர். சந்தையின் மையப் பகுதிக்குள் ஏற்கனவே சில ஆண் டுக்கு முன்பு மதுக்கடை இருந் தது. பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்த காரணத்தி னால் சிபிஎம் மற்றும் பொது மக்க ளின் போராட்டத்தின் காரணமாக அந்த கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை யில் பிப்3 ஆம் தேதி பொதுமக்க ளையும், அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் அறிவித்தி ருந்தார். இதைதொடர்ந்து கடந்த சனி யன்று பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்ற சமா தானக் கூட்டத்தில் பிப்ரவரி இரண் டாவது வாரத்திற்குள் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலந்து கொள்ளும் சமாதான கூட்டம் நடை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎம் ஒன் றியச் செயலாளர் என்.பக்ருதீன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து மீண்டும் செவ்வாயன்று வட்டாட்சியர் திரு நாவுக்கரசு தலைமையில் நடை பெற்ற சமாதானக் கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், உதவி மேலாளர், கோட்ட கலால் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கு பெற்ற பேச்சுவார்த்தையில் சிபிஎம் கட்சி கோரிக்கையை ஏற்று பொன்னமராவதி பேரூ ராட்சி பகுதிக்குள் மக்கள் அதிக மாக கூடும் பேருந்து நிலையம், வாரச்சந்தை, டாக்சி மார்க்கெட் பகுதிகளில் அரசு மதுகடை அமைக்க மாட்டோம் என அதி காரிகள் தரப்பில் எழுத்துப்பூர்வ மாக உறுதி அளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஜீவா னந்தம், ஒன்றிய செயலாளர் பக்ரு தீன், ஒன்றிய குழு உறுப்பினர் குமார், திராவிடர் கழக ஆசைத் தம்பி, மக்கள் பாதை ஞானசேகர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை யில் கலந்து கொண்டனர்.