tamilnadu

img

டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

புதுக்கோட்டை, மே 18- புதுக்கோட்டை மாவட்டம் வேப் பங்குடியில் உள்ள டாஸ்மாக் கடை மூன்று கிராமங்கள் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கடையால் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தினமும் வேலை க்குச் சென்றால் தான் உணவு என்கிற நிலையில் தான் அந்தப் பகுதியில் பெரும்பாலான குடும்பங்கள் உள்ளன. ஊருக்குள் டாஸ்மாக் கடை இருப்பதால் ஆண்களின் தினசரி வருமானம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கே சென்று விடு கிறது. இதனால், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் கடையை அகற்ற அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட் டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் கே.நாடி யம்மை, வாலிபர் சங்க எஸ்.பாண்டி யன், சிஐடியு சங்க கே.ரெத்தின வேல் பங்கேற்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையை மூடுவது தொடர் பாக ஒரு வாரத்திற்குள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெ டுப்பதாக காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் உறுதி யளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள கொரட்டூரில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக, டாஸ்மாக் கடை மூடப்பட்டது.  கழனிவாசல் ஊராட்சி கொரட்டூர் கிராமத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வரு கிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம் தேதி மூடப் பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, மே.18 கடையை திறக்க அதி காரிகள் முடிவு செய்தனர்.  இதையறிந்த அப்பகுதி பொது மக்கள், பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக் கடையால் பெண்கள் அப்பகுதி யில் நடமாட முடியாத நிலை உள்ளது.

அருகில் உள்ள வயல் வெளிகளில் உடைந்த பாட்டில்க ளும், பிளாஸ்டிக் கழிவுகளும் கிடப்பதால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. அரசு விதிமுறைகளை மீறி, சாலையை ஒட்டி கடை உள்ளது. இக்கடையை அப்புறப் படுத்த வேண்டும் என கிராம சபைக்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது” என மக்கள் கூறினர்.  இதைதொடர்ந்து பொதுமக்க ளுடன், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 2 மாத காலத்திற்குள் கடையை இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் மதியத்திற்கு பிறகு மதுக்கடை திறக்கப்பட்டது.