புதுக்கோட்டை, செப்.10- புதுக்கோட்டை மாவட்டத்தில் குடி மராமத்து திட்டப் பணிகள் போர்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். திட்டப் பணிகளை ஆய்வுசெய்த பிறகு அவர் தெரிவித்துள்ளது: தமிழகத்தில் நீர் ஆதாரங்களை சீர மைத்து அதன் மூலம் மழைநீரை சேமிக்கப்பட்டு நிலத்தடி நீரை மேம் படுத்தவும், நீர் பயன்பாட்டை முறை யாக ஒழுங்குபடுத்தவும், முதலமைச் சரின் குடிமராமத்து திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பொதுப் பணித்துறையின் சார்பில் 66 குளங்கள் ரூ.20.27 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப் பட்டு வருவதுடன் இதுவரை 35 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும் அக்னியாறு வடிநிலக் கோட்டத்தின் சார்பில் வரத்து வாய்க்கால்கள் தூர் வாரும் திட்டத்தில் 12 பணிகள் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டு 27.59 கி.மீக்கு தூர்வாரும் பணி கள் முடிவுற்றுள்ளது. இதே போன்று ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 650 சிறுபாசனக் குளங்கள் மற்றும் ஊரணிகள் தூர்வாரும் பணி ரூ.33.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. குளம் தூர்வாரும் பணிகளை மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து விவசாயிகள் பார்வையிடும் பொழுது பணிகள் நடைபெறுவது குறித்து பல்வேறு கருத்துகளை பிற விவசாயி களிடம் பகிர்ந்து குடிமராமத்து பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற வழி வகை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடை பெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணி களை இந்த மாத இறுதிக்குள் முழு வதுமாக முடிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப் பட்டுள்ளது என்றார். வேளாண் துணை இயக்குநர் பெரியசாமி, பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் உமா சங்கர், விவசாயிகள், பாசனதாரர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.