புதுக்கோட்டை, பிப்.24- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வில் சிறந்த புத்தகங்கள் மற்றும் படைப்புகளுக்கான விருதுகள் ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப் பட்டது. அரசியல், சமூகம், வரலாறு குறித்த கட்டுரைப் பிரிவில் பாரதி புத்த காலயம் வெளியீட்டின் மு.ஆனந்தன் எழுதிய பூஜ்ஜியநேரம், கலை, இலக்கியம், கல்வி, அரசியல் பிரிவில் எழுத்தாணி வெளியீட்டகத்தின் அ. அரிமாப்பாமகன் எழுதிய இயம்பும் எம்மொழி, கவிதை பிரிவில் காலச் சுவடு பதிப்பகத்தின் எம்.எம்.பைசல் எழுதிய வாப்பாவின் பேச்சு, சிறு கதை பிரிவில் தூரல் வெளியீட்டகத் தின் சந்தியூர் கோவிந்தன் எழுதிய தாத்தாவின் ஞாபகம், புதினம் பிரிவில் அன்னை ராஜேஸ்வரி பதிப்ப கத்தின் புதிய மாதவி எழுதிய பச்சைக்குதிரை ஆகிய புத்தகங்க ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கவிதை, சிறுகதைள்
கவிதைப் போட்டியில் அமீரகம் ஷார்ஜாவில் வகிக்கும் பிரியா ‘பற்றி எரியும் நகரம்’ கவிதைக்காக முதல் பரிசும், பெங்க@ரை சேர்ந்த ஷலஜா ‘சொல்லின் சுகம்’ கவிதைக் காக இரண்டாம் பரிசும், அகிலா கிருஷ்ணமூர்த்தி ‘சோழியாட்டம்’ கவிதைக்காக மூன்றாம் பரிசும் பெற்றனர். சிறுகதைப் போட்டியில் புலியூர் முருகேசன் ‘நாகையா திரு டித்தின்ற நடுத்தோட்டம்’ சிறு கதைக்காக முதல்பரிசும், பா.ஏகரசி தினேஷ்; ‘இடர் களையாய்’ சிறு கதைக்காக இரண்டாம்பரிசும், க.மூர்த்தி ‘மண்புணர்க் காலம்’ சிறுகதைக்காக பரிசும் பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் விருதுப் பட்ட யத்துடன் ரூ.5000 ரொக்கப்பரிசும், சிறு கதைப் போட்டியில் முதல்பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், கவிதைக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டன. விருதுகளை மற்றும் பரிசுத் தொகையை முன்னாள் அமைச்சரும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர், திரைப்பட இயக்குனர் ஆர்.பாண்டி ராஜ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி க்கு ஐடியா ப்ளஸ் சேர்மன் கிருஷ்ண வரதராஜன் தலைமை வகித்தார். அபெகா பண்பாட்டு நிறுவனர் மருத்துவர் நா.ஜெயராமன், கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.