tamilnadu

img

தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு விழா

புதுக்கோட்டை, ஏப்.25-புதுக்கோட்டை, புத்தாஸ் வீரக்கலைகள் கழகத்தின் தற்காப்பு கலை பயிற்சி முகாம் திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஏப்.15-ம் தேதி முதல் ஏப்.25 வரை நடைபெற்றது. தற்காப்புகலை பயிற்சி முகாம் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தராமன் தலைமையேற்க, நேரு யுவகேந்திராவின் கணக்காளர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார் வீரர்-வீராங்கனைகளுக்கு நற்சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கிசிறப்புரையாற்றினார்.