tamilnadu

குழந்தைகள் திருமணம்: உறுதுணையாக இருக்கும் பெற்றோர் மீது வழக்குப் பதிவு

புதுக்கோட்டை, அக்.21- குழந்தைகள் திருமணத்திற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அவர்பேசியது:  குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படாததை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து கண்கா ணித்திடவும், குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக அணுக வேண்டிய விபரங்கள் குறித்தும், போதிய விழிப்பு ணர்வை பொதுமக்களுக்கு தொடர்புடைய அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை மீட்டு தற்காலிகமாக தங்க வைக்க கூடிய வகையில்  தற்காலிக குழந்தைகள் காப்பகம்  அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.   குழந்தைகள் திருமணம் தொடர்பான சம்பவங்கள் நிகழும் போது அதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர் களின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் அரியாத வயதில் உள்ள குழந்தைக ளை மீண்டும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வழக்கு பதிவு முக்கியமாகிறது என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் டி.சாந்தி, தமிழ்நாடு குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பி.மோகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சந்திரசேகர், மாவட்ட சமூக நல  அலுவலர் ரேணுகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) முத்துவடிவேல், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலு வலர்கள் கலந்து கொண்டனர்.