புதுக்கோட்டை, ஆக.9- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வழங்கப்படும் சட்ட ஆலோச னைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடை பெற்றன. கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிராக நடைபெ றும் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வது குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பொதுமக்க ளுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு சார்பில், கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதியில் விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது. தன்னார்வ வட்ட சட்டப்பணி கள் குழு பணியாளர் செந்தில்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்வது, இலவச சட்ட உதவி பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, வடகாடு, கொத்தமங்கலம், நகரம் உள்ளிட்ட பகுதியில் சட்ட நூறு நாள் பணியில் ஈடு பட்டிருந்த பெண்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.