விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சங்கர்(29). இவர் விராலிமலையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்து வருவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் செந்தில், அசோக் மற்றும் பிரபு ஆகிய மூன்று பேரும் மாற்றுத்திறனாளி சங்கரை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று அவரை லத்தியால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சங்கர் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி காவல்துறை தலைவருக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் அளித்துள்ளார்.
அதனைதொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தாக்கிய முதல் நிலை காவலர் செந்தில், காவலர்கள் அசோக் மற்றும் பிரபு ஆகிய மூவரும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 3 காவலர்கள் தற்போது பணியிட நீக்கம் செய்து செய்து திருச்சி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.