புதுக்கோட்டை, செப்.7- புதுக்கோட்டை மாவட்ட கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட மாநாடு, பேரணி-பொதுக்கூட்டம் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரம் தியாகி சண்முகம் திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.வீரையன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.வெள்ளைச் சாமி கொடியேற்றினார். கே.அடைக்கன் வர வேற்றார். சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா ளர் க.செல்வராஜ், பொருளாளர் சி.மாரிக் கண்ணு ஆகியோர் அறிக்கைகளை முன் மொழிந்து பேசினர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலை வர் ப.சண்முகம், எம்.ஜியாவுதீன், ஜி.நாக ராஜன் ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் உரையாற்றினார். மாநாட்டில் தலைவராக எம்.ஜியாவுதீன், பொதுச்செயலாளராக ஏ.ஸ்ரீதர், பொருளாள ராக கரு.சின்னையா, துணைத் தலை வர்களாக எம்.கோவிந்தராஜ், ஏ.மாணிக்கம், துணைச் செயலாளர்களாக ஆர்.பரமசிவம், ஆ.பரிமளா ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசு கட்டுமான தொழிலை பாது காத்திட மணல், சிமெண்ட, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப் படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத் தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். கட்டுமானத் தொழி லாளர்களுக்கு இலவச வீட்டுமனையும், மானி யத்துடன் வீடும் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாலையில் பேரணி- பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர்.