tamilnadu

img

திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.... மு.க.ஸ்டாலின் உறுதி....

புதுக்கோட்டை:
வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் த.சந்திரசேகரன் இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசியது:

தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் நிகழ உள்ளது. அதற்குஅடிப்படையாக அனைத்து தொகுதிகளி லும் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என திமுக வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. இன்று (பிப்.8) மாலை சிவகங்கையுடன் 2-ஆம் கட்ட பிரச்சாரம் நிறைவடைகிறது. மொத்தம் 71 தொகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. 12-ஆம் தேதி 3-ஆம் கட்ட பிரச்சாரம் தொடங்க உள்ளது.

  வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று ஏற்கெனவே தெரிவித்து இருந்தேன். ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தவழ்ந்து வந்து தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி வந்தாரா?, இல்லையா?. இதை அவர்மறுத்தால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.பெங்களூரில் இருந்து ஒருவர் (சசிகலா) கொடியுடன் புறப்பட்டுவிட் டார். என்ன நடக்கப்போகிறதோ தெரிய வில்லை. ஆனால், நடக்க வேண்டியது நடக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை என்றார். இதைத்தொடர்ந்து, கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.