புதுக்கோட்டை, அக்.31- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்க லத்தை அடுத்த செரியலூர் ஜெமீன், இனாம் ஊராட்சிகளில் உள்ள வரத்துவாரிகளை தூர்வாரி நீராதாரத்தை பெருக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த செரியலூர் வடக்கு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 102-ஆவது நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் கிளைச் செயலாளர் வே. மாதவன் தலைமை வகித்தார். பெ.அண்ணா து4ரை முன்னிலை வகித்தார். நகரச் செயலா ளர் மணிவண்ணன் வரவேற்றார். விழாவில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர். செரியலூர் இனாம் அங்காடி அருகில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டடித்தர வேண்டும். செரியலூர் இனாம், ஜெமீன் ஊராட்சிகளில் உள்ள வரத்துவாரி களை தூர் வார வேண்டும். நீர்ப்பிடிப்புப் பகுதி யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாரியம்மன் கோவில் சாலையை செப்பணிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.