புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை அருகே தீப்பிடித்து வாழைமற்றும் கரும்பு பயிர்கள் கருகி நாசமாகின. இதற்குஉரிய இழப்பீடு வழங்கவேண்டுமென சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத் துரை வலியுறுத்தினார்.
கந்தர்வகோட்டை அருகே நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனக்குசொந்தமான இடத்தில் கரும்பு மற்றும் வாழைப்பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமையன்று மதியம்திடீரென ஏற்பட்ட தீயால் கரும்பு மற்றும் வாழைப் பயிர்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்துசென்று தண்ணீரைப் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயைமுழுவதுமாக அணைப்பதற் குள் சுமார் 12 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் கருகி நாசமாகின.
எம்.சின்னத்துரை நேரில் பார்வைதகவலறிந்த கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வட்டாட்சியர் புவியரசன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவ
சாயிக்கு ஆறுதல் கூறியதோடு பாதிப்புக்கு ஏற்ப உரியஇழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமெனவும் எம்எல்ஏ வலியுறுத்தினார்.