tamilnadu

img

நீர்வளத்தை மேம்படுத்தும் திட்டத்தில் தமிழகத்தை சேர்க்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் கடிதம்]

சென்னை,டிச.27- நீர்வளத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் ‘அடல் புஜால் யோஜனா’ புதிய திட்டத்தில் தமிழகத்தை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில், மக்களின் பங்களிப்போடு, நிலத்தடி நீர்வள  மேலாண்மைக்காக ‘அடல் புஜால்  யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு உங் களுக்கு வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த திட்டத்தில், தமிழகம் சேர்க்கப்படவில்லை என்பதை உங்களிடம் குறிப்பிடுவதற்கு நிர்ப் பந்திக்கப்பட்டுஉள்ளேன்.

தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம் ஆகும். தமிழக த்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டத்தில் இருந்து அதிகபட்சம் நீர் எடுக்கப்  பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பருவமழை பொய்த்துப் போய்விடுவதால் நிலத்தடி நீரையே நம்பியிருக்கும் தமிழகத்துக்கு அதை குறைந்த அளவிலேயே பெறவேண்டிய சூழல் ஆகிறது. இதனால், தமிழ கத்தில் 1,166 வருவாய் கிராமங் களில் 541 வருவாய் கிரமங்களின் நிலைமை மிகுந்த மோசம் அடைந்துள்ளது. தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி அதை மக்கள் இயக்கமாக அரசு மாற்றி  உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள நீர்வளத்தை பாது காத்து விரிவுபடுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘அடல் புஜால் யோஜனா’ திட்டத்தில் தமிழக அரசையும் சேர்ப்பதற்கு மத்திய நீர்வளத் துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.