சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் சாடல்
காஞ்சிபுரம், ஆக.20- சந்தையில் பொருட்களுக்கு கிராக்கி இல்லை என்றால் தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிடும்; ஆனால் பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்தி ருக்க முடியும் என்று சிஐடியு பொதுச் செயலா ளர் தபன்சென் கூறினார். காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் சிஐ டியு தமிழ்மாநில 14வது மாநாட்டில் பங்கேற் றுள்ள அவர் சனிக்கிழமையன்று (செப். 20) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாடு மிகமோசமான பொருளாதார மந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கி றது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. உலகம் முழுவதும் முதலா ளித்துவ சந்தைப் பொருளாதார முறை பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தில் மிகப் பெரிய மந்தம் ஏற்படப்போகிறது. அதில் ஒரு பகுதிதான் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மந்த நிலை.
இந்த மந்தநிலை உருவாகக் காரணமே ஒட்டுமொத்த முதலாளித்துவ முறையில் கடைபிடிக்கப்படும் நவீன தாராளமய, தனி யார்மய, பொருளாதாரக் கொள்கைகள் தான். அடிப்படையில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக உள்ள மக்களின் வருமானம் குறைந்துவிட்டது. இத னால் அவர்களிடம் வாங்கும்சக்தி வீழ்ந்து விட்டது. இதனால் தொழிற்சாலைகளில் உற் பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கிராக்கி இல்லை. இதனால் அவை விற்பனையாகா மல் தொழிற்சாலைகளில் தேக்கமடைந்துள் ளன. இதனால் முதலாளிகள் தங்களது உற் பத்தியை குறைத்துவிட்டார்கள். இது இப் படியே நீடித்தால் ஒருகட்டத்தில் அவர்கள் தொழிற்சாலையை மூடிவிடுவார்கள்.
15 லட்சம் தொழிலாளர் வேலை இழப்பு
நமது நாட்டில் ஒட்டுமொத்த ஆட்டோ மொபைல் ஆலைகளும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. இதனால் 15 லட்சம் தொழிலா ளர்கள் வேலையிழந்துள்ளனர். ஆலைகள் வாரத்தில் 3 நாட்கள், 4 நாட்கள் மூடப்படுவ தால் அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம் குறைகிறது. இதில் ஒப்பந்தத் தொழி லாளர் நிலைமை மிகமோசம். அவர்களுக்கு வேலையில்லாத நாட்களில் சம்பளம் கிடைக் காது. அசோக்லேலண்ட் தொழிற்சாலையில் நான்கு யூனிட்டுகளில் ஒரு மாதத்தில் மட்டும் 59 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து ஊதி யத்தையும் இழந்து விட்டனர். இந்த தொழிலாளர்கள் சைக்கிள் வாங்க முடியாது, பழம் வாங்க முடியாது, துணி வாங்க முடியாது, பணம் இல்லாத காரணத் தால் எந்தபொருளையும் வாங்க முடியாத நிலை ஏற்படும் போது மறுபக்கம் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங் கள் உற்பத்தியை குறைக்கும். இதனால் பொருளாதாரம் வளர்ச்சியின்றி மந்த நிலைக்கு செல்லும். உலகம் முழுவதும் இந்த நிலைதான் நிலவுகிறது.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித் தால்தான் இந்த பிரச்சனையில் இருந்து விடு படமுடியும். மக்களின் நுகர்வை அதிகரிக்கா மல் பிரச்சனை தீராது. இதைவிட்டால் வேறு வழியில்லை. இதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 5 முதல் 6ஆண்டுகளாக நாட்டில் அடிப்படைக் கட்ட மைப்பு துறைகளில் அரசு முதலீடு கணிச மாக குறைந்துவிட்டது. முதலீடுகள் தான் வேலைவாய்ப்பை உருவாக்கும். உற்பத்தி யை பெருக்கும். இதுதான் உண்மை. இதை பிரதமரோ நிதியமைச்சரோ மறுக்கமாட்டார் கள். பாஜக ஆட்சியில் பங்குச்சந்தையில் தான் முதலீடு அதிகரித்தது. அதனால் எந்த பயனும் இல்லை. பங்குச்சந்தை வேலை வாய்ப்பை ஏற்படுத்தப்போவதில்லை.
கார்ப்பரேட்களுக்கு மடை மாற்றும் அரசு
ஆனால் நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டிய மத்திய அரசு முதலீட்டாளர் களுக்கு சலுகை மேல் சலுகை அளிக்கிறது. பாஜக-2 அரசின் முதல் பட்ஜெட்டில் 2லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெரும் நிறு வனங்களுக்கு சலுகை அளித்தார்கள். கடந்த ஜூலை 5 ஆம்தேதி தாக்கல் செய்த பட்ஜெட் டில் கர்ப்பரேட் வரியை 35 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக குறைத்தார்கள். பின்னர் ஒருமாதம் கழித்து ஆகஸ்டில் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் சில சலுகைகளை அறிவித்தார். அப்போது 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகளை அறி வித்தார். சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவன சமூகப்பொறுப்பு திட்டத்தின் கீழ் செலவிட வேண்டிய தொகையின் சதவீதத்தை மேலும்குறைத்து சலுகை அளித்தார்கள். இந்த சலுகைளை அறிவித்த பின்னரும் பொரு ளாதாரம் மேம்படவில்லை. மாறாக மேலும் மோசமான நிலைக்குத்தான் சென்றது. ஏற்க னவே அளித்ததுபோதாது என்று வெள்ளி யன்று நிதியமைச்சர் 1லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகளை அறிவித்துள் ளார். பெரிய நிறுவனங்கள் மீதான கார்ப்ப ரேட் வரியை 22 விழுக்காடாக குறைத்து விட்டார்கள். மேலும் அக்டோபர் முதல் தேதி யில் இருந்து இந்தியாவில் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் 15விழுக்காடு வரி செலுத்தினால் போதும் என்று அறிவித்து விட்டார்கள். இப்படி 35 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக குறைத்து கடைசியாக 15விழுக்காடு குறைத்திருப்பதன் நோக்கம் என்ன? தேர்தல் பத்திரங்கள் மூலமாக எங்க ளுக்கு கணிசமான தொகையை தாருங்கள் என்று மறைமுகமாக பாஜக கூறுகிறது என்பது தான் பொருள். கடந்த மக்களவைத் தேர்த லின்போது தேர்தல் பத்திரங்கள் மூலமாக 90விழுக்காடு நன்கொடைகள் பெருநிறுவ னங்களிடமிருந்து பாஜகவுக்குத்தான் சென்றன.
இந்த கோமளித்தனமான ஆட்சியா ளர்களால் பொருளாதார மந்தநிலைக்கு தீர்வு காணமுடியாது. அதுமேலும் மோசமடையும். ஆலை மூடலுக்கும் ஆட்குறைப்புக்கும் தேக்கநிலைக்கும் தீர்வு காணாவிட்டால் பிரச்சனை மேலும் தீவிரமடையும். எனவேதான், மாற்று பொருளாதார கொள்கைகளை கடைபிடிக்குமாறு தொழிற் சங்கங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வரு கின்றன. சந்தையில் கிராக்கியை ஏற்படுத்தா மல் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளித்தருவதால் பிரச்சனை தீராது.
ஏழைகளுக்கு கடன் கொடுங்கள்
சிறு குறு நடுத்தர விவசாயிகளுக்கு வங்கி களில் கடன் கிடைப்பதில்லை. மறுபுறம் பெரும் கர்ப்பரேட் முதலாளிகள் இந்த வங்கி களில் இருந்து பத்தாயிரம் கோடி, 15ஆயி ரம் கோடி ரூபாய் என கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுகிறார்கள். சாதாரண மக்கள் கடன் வாங்கினால் அதை திருப்பி செலுத்து வார்கள். இதனால் வங்கிகளின் நிதி நிலை யும் ஆரோக்கியமாக இருக்கும். சாதாரண விவசாயிகளுக்கு கடன் கொடுத்தால் அவர்கள் தங்களது நிலங்களில்சாகுபடி செய்து வேளாண் உற்பத்தியை அதிக ரிப்பார்கள். விளை பொருட்களை விற்கும் போதுபணம் கிடைக்கும். பணத்தை கொண்டு சந்தையில்பொருட்களை வாங்குவார்கள். இதனால் ஆலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனையாகும். இப்படித்தான் பொருளதாரம் மேம்படமுடியும். இவ்வாறு தபன் சென் கூறினார். பேட்டியின்போது சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செய லாளர் முத்துக்குமார்ஆகியோர் உடனி ருந்தனர்.
காஞ்சிபுரத்தில் இன்று மாபெரும் பேரணி
காஞ்சிபுரம், செப்.21- சிஐடியு 14வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் ஞாயிறன்று (செப்.22) மாபெரும் பேரணி பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெறுகிறது. கடந்த 19ஆம் தேதி பொது மாநாட்டைத் துவக்கிவைத்து அகில இந்தியத் துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டை சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் ஹேமலதா தொடங்கிவைத்துப்பேசினார். மாநாட்டில் மாநிலபொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தாக்கல் செய்த அறிக்கை மீது ஏராளமான தொழிலாளர் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். விவாதத்திற்கு ஞாயிறன்று மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தொகுப்புரை வழங்குகிறார். பின்னர் சிஐடியு புதிய மாநிலக்குழு, மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பிரதிநிதிகள் மாநாட்டை முடித்து வைத்து சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் பல முக்கிய மான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் நிறைவு நாளான செப். 22 (இன்று) மாலை சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மாநாட்டுப் பேரணியும் காந்திரோடு தேரடியில் அகில இந்திய - மாநிலத் தலை வர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் சிஐடியு அகில இந்தியத் தலைவர்கள் டாக்டர் ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென், துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநில தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்பட பலர் உரையாற்ற உள்ளனர்.