திருச்சிராப்பள்ளி, நவ.15- மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்கு னர்கள், துப்பரவு பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு அரசாணை பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும். 1.10.17 முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க திருச்சி புறநகர் மாவட் டக்குழு சார்பில் வியாழனன்று உப்பிலிய புரம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க தலைவர் பழனிவேல், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம். உப்பி லியபுரம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.