நாகப்பட்டினம், ஜூன் 5- கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக உடனடியாக ரூ.7500- வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, விவசாயத் தொழிலா ளர் சங்கக் கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி, சி.பி.எம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர் உள்ளிட்டோர் வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் சி.பி.எம்.ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு ஆகியோர் பங்கேற்று மனு அளித்தனர்.