tamilnadu

img

குடிநீர் பற்றாக்குறைகளை போக்க நடவடிக்கை

தரங்கம்பாடி, ஜூன் 13- தரங்கம்பாடி, பொறையாறு, எருக்கட்டாஞ்சேரி உள்ளிட்ட பகுதி களில் திருட்டுத்தனமாக குடிநீர் பைப் மூலம் மின் மோட்டார் இணைப்பு கொடுத்து குடிநீர் எடுக்கப்படுகிறதா? என்று தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமை யில் சுகாதார ஆய்வாளர் சுப்பிர மணியன், இளநிலை உதவியாளர் மதியரசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரங்கம் பாடி பொறையாறு பகுதிகளில் இரண்டு இடங்களில் குடிநீர் பைப்லைனில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சப்படுவது தெரியவந்ததை தொடர்ந்து 2 மின் மோட்டார்களை கைப்பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ஆய்வு பணி நடை பெற்று வருகிறது. தொடர்ந்து செயல் அலுவலர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகை ஆட்சியர் மற்றும் தஞ்சாவூர் மண்டல பேருராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோரின் வழி காட்டலில் சுகாதார பணிகள், மற்றும் தூய்மை பணிகளும் தரம் பிரிக்கப்பட்டு வீடுகள் தோறும் குப்பை வாங்கும் பணிகளும் குடிநீர் வினியோகம் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தரங்கம்பாடி பேரூராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூர் செய்கின்ற வகையில் வீடுகளில் அல்லது வர்த்தக நிறுவனங்களில் யாராவது மின் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.