சென்னை,ஜன.21- மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநி லங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8 ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் 7வது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தை பெற்றுக்கொண்டு வார விடு முறையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாகக் கூறினார். எனவே அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறியும் பொருட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.