தரங்கம்பாடி, ஜூலை 20- மயிலாடுதுறை அரசு மருத்துவம னையில் தூய்மைப்பணி, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை செய்யும் ஸ்மித் என்ற தனியார் நிறுவனத்தில் பணியா ற்றிய 5 தொழிலாளர்களை 3 மாத த்திற்கு முன்பு திடீரென பணியிலிருந்து அந்நிறுவனம் நீக்கியது. வாழ்வாதாரம் இழந்து தவித்த தொழி லாளர்களுக்கு ஆதரவாகவும், உடனடி யாக அவர்களுக்கு வேலை வழங்க வலி யுறுத்தியும் சிஐடியு அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி யும், 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் வருவாய்த் துறையினரின் உத்தரவை ஏற்றுக்கொள்வதாக ஒவ்வொரு முறை யும் கூறி செல்லும் ஸ்மித் நிறுவனம் தொ டர்ந்து அலட்சியம் செய்து வந்தது. இதையடுத்து சனிக்கிழமை மருத்து வமனை முன்பு சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் உடனடியாக பணி வழங்குவதாக கூறிவிட்டு, மீண்டும் வேலை வழங்கா மல் அப்பாவி தொழிலாளர்களை ஸ்மித் நிறுவனம் அலட்சியப் படுத்தியதால் திங்களன்று கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவீந்திரன் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் மாவட்ட செய ற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவி ச்சந்திரன், டி.துரைக்கண்ணு, மாரி யப்பன், மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், சிபிஎம் வட்டச் செயலாளர்கள் சி.மேக நாதன், விஜயகாந்த், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வ.பழனிவேலு, அரசு மருத்துவமனை துப்புரவு தொழி லாளர் சங்க செயலாளர் (சிஐடியு) நெப்போலியன் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதி யம் வழங்க வேண்டும், நிலுவைத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், செக்யூரிட்டி பணி செய்த சேது என்பவரை பழிவாங்கும் நோக்கத்தில் துப்புரவு பணியாளராக நியமித்து எந்தவித பாதுகாப்பு உபகர ணங்களுமின்றி கொரோனா நோயாளி கள் வார்டில் பணி செய்ய நிர்பந்தி ப்பதை உடனடியாக நிறுத்திக்கொண்டு மீண்டும் அவரை செக்யூரிட்டி பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலா ளர்களான பானுமதி, ஜெனிபர், சங்கீதா. விநாயகமூர்த்தி, சேது ஆகியோருக்கு மீண்டும் பணி வழங்க தாமதித்தால் போ ராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என எச்சரித்தனர்.