tamilnadu

img

மாதர் சங்க 16வது மாநில மாநாடு: 1000 மையங்களில் கொடியேற்றம்

சென்னை, செப்.11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் 1000  மையங்களில் ஞாயிறன்று  (செப். 11) கொடியேற்றப் பட்டது. மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 29, 30, அக்டோ பர் 1 ஆகிய தேதிகளில் கட லூரில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டு பிரச்சாரத்தை தொடங்கும் வகையில் மகாகவி பாரதி யார் நினைவு நாளான ஞாயி றன்று (செப். 11) மாநிலம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பரங்கி பேட்டையிலும், மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா சிதம்பரத்திலும் கொடியேற் றினர். மத்திய சென்னை மாவட்டம் நேருபார்க்கில் மாநிலப் பொதுச் செயலா ளர் பி.சுகந்தி கொடியேற்றி னார். இதில் மாவட்டச்  செயலாளர் வி.தனலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.மனோன்மணி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.