tamilnadu

img

புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாட்டை தொடர்ந்து, புதுச்சேரியிலும் அக்டோபர் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், பண்டிகை முடிந்து மீண்டும் வேலைக்கு திரும்புவர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அக்டோபர் .21 ஆம் தேதி தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனை தொடர்ந்து, புதுச்சேரியிலும் (அக்.21) பொது விடுமுறை அறிவித்து முதலமைச்சர் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21-ஆம் தேதியன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.