62 நாட்களாக நடைபெற்ற அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் அமைச்சர் முன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
போக்குவரத்துத்துறை அமைச்சரின் அழைப்பின் பேரில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் மற்றும் ஓய்வு பெற்ற நல அமைப்புகளின் தலைவர்கள் அமைச்சர் சிவசங்கருடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
1.இந்த பேச்சுவார்த்தையில்; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கான ஒப்பந்த அரியஸ் தொகையை 15 நாட்களுக்குள் முதல் தவணையை தறுவதாக கூறியுள்ளனர்.
2.ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மருத்துவ காப்பீடு தொடர்பாக அரசு முடிவு எடுத்து முதல் தவணையும் கட்டுவதாக உறுதியளித்துள்ளனர்.
3.26 மாதங்களாக, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்கள் வராமல் இருந்தது. வரும் பொங்கல் பண்டிகைக்குள் அனைத்து தவணைப் பணமும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
4.அதே போலப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரினோம். தீபாவளி பண்டிகை முடிந்து தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசுவதாக உறுதியளித்துள்ளனர்.
5.சில கோரிக்கைகள் நிறைவடைந்துள்ளது. சில கோரிக்கைகளுக்குப் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் 62 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை நிறைவு செய்தனர்.