பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு திமுக சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும், அதற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய் கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரியும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.இராசா எம்.பி. சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன், மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை (பெரம்பலூர்), நல்லத்தம்பி (வேப்பந்தட்டை கிழக்கு), சோமு.மதியழகன் (ஆலத்தூர் மேற்கு), தி.மதியழகன் (வேப்பூர் கிழக்கு), நகர செயலாளர் எம்.பிரபாகரன் உள்பட திரளாக கலந்து கொண்டனர்.