பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 நியாய விலைக் கடைகளில் 1,77,025 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் 1000 ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் துவக்க விழா ஞாயிறன்று பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் இயங்கி வரும் துறைமங்கலம் நியாய விலை கடையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் செல்வகுமரன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் பெரம்பலூர், ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், கோட்டாட்சியர் சுப்பையா, மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் பிரேமா, சரக துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை, பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் த.அறப்பளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.