tamilnadu

img

மாமேதை காரல் மார்க்ஸ் இருநூற்றாண்டு விழா

பெரம்பலூர், மே 5-மாமேதை காரல் மார்க்ஸ் 1818-ல் மே 5-ஆம் தேதி பிறந்தார். அவரது 200-வது ஆண்டு பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மார்க்சை பற்றியும், மார்க்சியத்தைப் பற்றியும் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் நூல் வெளியீடுகள் என இருநூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் ஞாயிறன்று காரல் மார்க்சுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. துறைமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர்கள் எஸ்.அகஸ்டின், ஆர்.ரெங்கராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டத் தலைவர் கே.கண்ணன், பொருளாளர் வி.தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் எம்.பன்னீர்செல்வம், பி.பாலகிருஷ்ணன், எஸ்.நல்லுசாமி, எஸ்.காசிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி

இதே போல் திருச்சி வெண்மணி இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் காரல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்வர்உசேன், சின்னசாமி, மாதர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாமேதை கார்ல் மார்க்ஸ் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.