tamilnadu

மின் ஊழியர் மாநாட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர், ஆக.17- 2011-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதியன்று தோழர் ஜெ.நாவலன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். 8 ஆண்டு கடந்து விட்ட நிலையில் இதுவரை காவல்துறை சார்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. காவல்துறையின் அலட்சியப் போக்கு சமூக விரோதிகளை பாதுகாப்பதற்கானதா என்ற ஐய ப்பாடு எழுந்துள்ளது. எனவே பேரளம் காவல்துறையைச் சந்தித்து விரைவாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வலியுறுத்தி விரைவில் மாபெரும் கண்டன இயக்கம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை திருவாரூரில் ஆர்.குமாரராஜா தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநில செ யலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக ஆற்று மணல் திருட்டு பகிரங்கமாக நடைபெற்று வருகிறது. குடிமராமத்து என்ற பெயரிலும், விவசாயிகள் என்ற போர்வையில் நீர் நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மணல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆளு ங்கட்சி பிரமுகர்கள் இதில் தரகர்களாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும்.  மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனை யைக் கண்டும் காணாமல் உள்ளது. அந்த மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்திடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.