பெரம்பலூர், பிப்.26- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக 2020 ஆம் ஆண்டுக்கான பெரம்பலூர் மாவட்ட புத்தகத் திரு விழா நடத்துவதற்கான ஆலோசனை மற்றும் வரவேற்புக் குழு கூட்டம் செவ்வாயன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஆர்.சி.ஆர் கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மக்களுக்கான மரு த்துவர் கழக மாநிலச் செயலாளர் சி.கருணாகரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அறி வியல் இயக்க மாவட்டச் செயலாளர் ராமர் வரவேற்றார். பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப் பேரவைச் செயலாளர் முகுந்தன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ப.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செய லாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பேரா.சுகுமாரன், பாரதி புத்தகாலய பதிப்பா ளர் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றி னர். பெரம்பலூரில் நடப்பாண்டு 50 பதி ப்பகங்களை கொண்டு புத்தகத் திருவிழாவை நடத்துவது, பெரம்ப லூர் மாவட்ட எழுத்தாளர்களை புத்த கத் திருவிழா மேடையில் பாராட்டி, எழுத்தாளர்களை அங்கீகரிக்கச் செய்வது, பெரம்பலூர் மாவட்ட வரலாறுகளைக் கண்காட்சியாக வை ப்பது, புத்தக பரிமாற்றத் திருவிழா நடத்துவது, பகல்நேர “ஸ்கை வா ட்சிங்” எனப்படும் நவீன டெலஸ்கோப் மூலம் அஸ்ட்ரானமியை நேரடி நிக ழ்வாகப் பார்வையிடச் செய்வது, தமிழ்நாடு அறிவியல் இயக்க புது தில்லி விஞ்ஞானிகளை மக்களோடு உரையாட வைப்பது, சமூக வலைத ளங்களில் புத்தகத் திருவிழாவை வெளிப்படுத்தச் செய்வது, பெர ம்பலூர் புத்தகத் திருவிழாவினை ஜூன் 24 முதல் ஜூலை 5 வரை அனை த்து சமூக இயக்கங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவ னங்கள், இலக்கிய அமைப்புகளின் ஆதரவோடும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் செல்லத்துரை, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தங்கராசு, நகரத் தலைவர் ஆறுமுகம் கவிஞர் எட்வின், அல்மைட்டி பள்ளி தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார், ஜே.கே.மஹால் உரி மையாளர் அப்துல்கலாம் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறி வியல் இயக்க மாவட்டத் தலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.