பெரம்பலூர், பிப்.6- பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்ப லூர், லெப்பைகுடிகாடு, வி.களத்தூர், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, அரும்பாவூர், பூலாம்பாடி, டி.களத்தூர், கு.பாளையம், ஆகிய பகுதிகளில் பெரு மளவு சிறுபான்மை மக்களாகிய இஸ்லா மிய மக்களும் கிறிஸ்தவ மக்களும் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியிலி மத்திய அரசு குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகிய சட்டங்களை அறிவித்தது முதல் அச்சமும் பதட்டமும் நிலவி வருகிறது. எங்கே நமது குடியுரிமை பறிக்கப்பட்டு விடுமோ? நாம் நாடற்றவர்களாக ஆக்கப் பட்டு விடுவமோ?. ஆகதிகளாக திரிய வேண்டிய நிலை ஏற்படுமோ? என்ற அச்சத்தினால் டிசம்பர் 10 ஆம் தேதி அன்றே மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 20 முதல் புத்தாண்டு துவக்கம் வரை மாவட்டம் முழுவதும் இச்சட்டங்களை குறித்த விழிப்பு ணர்வு பிரச்சார விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டன. புத்தாண்டு தினத்தன்று மாவட்டம் முழுவதும் மெழுவர்த்தி ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஜனவரி 13 ஆம் தேதி அன்று தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நாங்கள் ஆவணங்களை தர மாட்டோம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாமியப் பெண்கள் பேரணி ஜனவரி 21 அன்று அனைத்து சிறு பான்மை மக்களையும் உள்ளடக்கிய மூவாயிரம் பேருக்கு மேல் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்ப லூர் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை சிறுபான்மை இயக்க தலை வர்கள் அபுபக்கர் சித்திக், குதரத்துல்லா, முஸ்தபா, முகமதுரபீக், அசன்முகமது, சர்புதீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டு விளக்க உரையாற்றி னர். ஜனவரி 25 அன்று ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆயிரக்கணக்கான இஸ்லாமி யப் பெண்கள் கலந்து கொண்ட பேரணி பெரம்பலூர் ரோவர் ஆர்ச் முதல் பாலக்க ரை வழியாக மாவட்ட ஆட்சியரகம் வரை சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கப் பட்டது. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்கள் முன்பு தேசியக் கொடிஏற்றி அரசியலமைப்பு சாசனத்தை பாது காக்கும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள மக்கா ஜூம்ஆ மசூதியில் நடைபெற்ற தேசியக் கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்ல துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். ஜனவரி 26 அன்று மாலை பெரம்ப லூர் காந்தி சிலை முன்பு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கோரிக்கை களை விளக்கி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிறுபான்மை மக்களோடு 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். 5ஆயிரம் துண்டு பிர சுரங்கள் வழங்கப்பட்டன. கவியரங்கம் கருத்தரங்கம் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ப.செல்வகுமார் தலைமையில், குடியரசை பாதுகாப் போம், குடியுரிமையை பாதுகாப்போம் என வலியுறுத்தும் 71 கவிஞர்கள் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனவரி 28 அன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வி.களத்தூர் மற்றும் லெப்பை குடிகாடு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற் கெதிராக கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் ஜனவரி 30 அன்று தமிழகம் முழுவதும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களும் இஸ்லாமிய மதகுருமார்களும் ஏராளமான பொது மக்களும் பங்கேற்றனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சிபிஎம் மாநிலக்குழு எம்.சின்ன துரை, விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதுஅலி மற்றும் மனித நேய மக்கள் கட்சி சுல்தான்மொய்தீன் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர். அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் விதமாக 10 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டன. அன்று இரவு 7 மணியளவில் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு மெழுவர்த்தி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மருத்துவர்கழக மாநில செயலாளர் டாக்டர் சி.கருணாகரன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிப்ரவரி 1- அன்று சமூக நீதி மாணவர் இயக்கத்தின் சார்பில் ஜாமியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து பெரம்பலூர் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. கொலைமிரட்டல் பிப்ரவரி 2 முதல் 8 வரை மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்க மும் மாணவர்கள் மத்தியில் எழுச்சியான வரவேற்பு பெற்றுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிரான தொடர்ச்சியான போராட்டங்கள் பெரம்ப லூர் மாவட்டத்தில் மென்மேலும் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடி யாத சமூக விரோதி ஒருவர் போராட்டங்க ளை ஒருங்கிணைத்து நடத்தி வரும் மாவட்ட ஒருங்கினைப்பாளர் என்.செல்ல துரைக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் அனைத்து இயக்கங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுத்தது குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் சிஏஎ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை விளக்கியும் 7.2.2020 (இன்று) பெரம்பலூர் உழவர் சந்தை திடலில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட ஜமாத் உலமா சபை தலைவர் முகமது முனீர் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபுபக்கர்சித்திக், மனிதநேய மக்கள் கட்சி அச்சிறுபாக்கம் ஷாஜகான், ஜமாத் இஸ்லாமி மாநிலசெயலாளர் முகமது அமீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் காயல்மகபூப் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். திரளாக பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கி றோம்.