சென்னை:
ஆடி வெள்ளி, பக்ரீத், ஆடிப்பெருக்கு என தொடர் பண்டிகைகளால் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.கொரோனா ஊரடங்கால்போக்குவரத்து சேவை முடங்கியதால் கடந்த 4 மாதங்களாக பூக்களின் விலை மிகவும் குறைந்திருந்தது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு சிறிய கோயில்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பண்டிகைகளை எளிமையாக வீடுகளிலேயே கொண்டாடத் தொடங்கியுள்ளனர். திண்டுக்கல் சந்தையில் கடந்த வாரம்கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல் முல்லைப்பூவின் விலை 450 ரூபாயாகவும், சம்பங்கி, அரளிபூக்களின் விலை 150 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.