பழனி:
இடும்பன் நகரில் இலவச கழிப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும். தெரு விளக்குகள் அனைத்தும்எரிவதை மின்வாரியம் உறுதிப்படுத்த வேண்டும். இடும்பன் நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும். தேஸ்தான கழிப்பறை இடும்பன்நகர் மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று சிவகிரிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, பி.மாரிக் கண்ணு, வி.சுரேஷ், பி.நாகராஜ், டி.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.