tamilnadu

பழனியில் கொரோனா அச்சம் ரூ.200 அபராதம் விதிக்க முடிவு

பழனி:
பழனி நகரில் கொரனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தொற்று உறுதிப்படுத்தியவர்களை அரசு மருத்துவமனை, கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு மையத்தில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் கொரோனா பற்றி கவலையில்லாமல் முகக்கவசம், சானிடைசர் உள்ளிடவைகளை பயன்படுத்தாமல் வருகின்றனர். இதனால் நோய் தொற்று எளிதில் பரவும் சூழல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பழனி மருத்துவமனை தலைமை மருத்துவர்உதயகுமார் மற்றும் சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவர் மகேந்திரன் உள்ளிட்டோர் முககவசம் பற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் முககவசம் இல்லாமல் வரவேண்டாம். தவறும் பட்சத்தில் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.