tamilnadu

img

கொரோனா பாதித்த மலையாளி சவுதியில் பலி

கண்ணூர்:
கண்ணூர் மாவட்டம் பானூர் எல்.பி.பள்ளி அருகில் வசிக்கும் மம்மு-பவுசியா தம்பதியரின் மகன் ஷப்னாஸ் (28), சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இவருக்கும் கரியாடு புனத்தில் முக்கைச் சேர்ந்த சஹனாஸுக்கும் கடந்த ஜனவரி ஐந்தாம் தேதி திருமணம் நடந்தது. மார்ச் பத்தாம் தேதி சவுதிக்கு திரும்பிச் சென்றார். இந்நிலையில்  கொரோனா தொற்றுக்கு உள்ளான ஷப்னாஸ்  மதினாவில் உள்ள ஜெர்மனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சனியன்று அதிகாலை உயிரிழந்தார்.