காந்தியடிகள் இந்தியாவில் முதல் சுற்றுப் பயணமாக வருகை தந்த பொறையார், தில்லையாடி பகுதிகள்
வரலாற்றிலிருந்து மிக எளிதாய் அகற்றி விட முடியாத ஊர்களில் பொறையாருக்கும், தில்லையாடிக்கும் முக்கிய பங்குண்டு. மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு டேனிஷ் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்த இப்பகுதிகளில் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
காந்தியடிகள் வருகை
தென்னாப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராக காந்தியடிகள் போரா டிய போது அவருக்கு துணையாய் இருந்தவர் டர்பன் நகரில் தொழில் செய்த பொறையார் குமரன் நகரில் வசித்த பாலகுரு செட்டியார். மற்றொருவர் காந்தியின் போராட்டக் குணத்தை தீவிரப்படுத்திய, தென்னாப்பிரிக்கா வில் 16 வயதிலேயே காந்தியின் போரா ட்டத்தில் கலந்து கொண்டு சிறை கொடு மைகளை அனுபவித்து நோயுற்று இறந்தவரான தியாகி தில்லையாடி வள்ளியம்மை. இந்தியா வரும் போது பொறை யாருக்கு வந்துச் செல்லுங்கள் என பாலகுரு செட்டியார் விடுத்த கோரிக்கை யை நிறைவேற்றவும், தனது போராட்ட த்தில் பங்கேற்று உயிர் நீத்த வள்ளி யம்மையின் சொந்த ஊரைக் காண வும் 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ல் ஆம் தேதி பொறையார் வந்தார் காந்தி. குமரன் நகரில் பாலகுரு செட்டி யார் வீட்டில் ஓய்வெடுத்த அவர். அங்கி ருந்து மறுநாள் மே-01 அன்று தில்லை யாடிக்கு சென்று வள்ளியம்மையின் உற வினர்களை சந்தித்தார். தென்னாப் பிரிக்காவில் உயிர் நீத்த செல்வம் என்கிற தொழிலாளியின் வீட்டிற்கும் சென்ற காந்தி, பொறையார் மற்றும் தில்லையாடி பகுதியில் வாழ்ந்த தலித் மக்களின் வாழ்க்கை நிலை, வறுமை யினை கண்டு மனம் வருந்தினார் என்ற பதிவும் உள்ளது.
பொறையார், தில்லையாடிக்கு காந்தி வந்த பிறகு தான் தலித் மக்கள் மீது மிகவும் அக்கறைக் கொண்டவ ராக தன்னை அர்ப்பணித்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. பொறை யாரில் அவர் தங்கிய வீட்டை அப்பகுதி மக்கள் புனித இடமாக கருதுகின்ற னர். அந்த வீட்டில் அவர் பயன் படுத்திய பொருட்கள் இன்றும் பாது காக்கப்படுகிறது. அதேப் போன்று தில்லையாடியில் காந்தி அமர்ந்த இடத்தில் நினைவுத் தூணும், அதையொட்டி மணி மண்டப மும் 1969 ல் கட்டி முடிக்கப்பட்டு பார்வைக்கு விடப்பட்டது. அங்கு அரிய புகைப்படங்களும், தமிழில் காந்தி எழுதிய கடிதங்களும் காட்சியாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த தில்லை யாடி, பொறையார் பகுதிகளில் காலத்துக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் எதுவுமில்லாதது வேதனையாக இருப்ப தாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
தில்லையாடியில் உள்ள வள்ளி யம்மையின் மணி மண்டபமும் உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து காட்சி தருகிறது. காந்தியடிகள் தில்லையாடி க்கு வருகை தந்த நூற்றாண்டு விழாவை கூட கடந்த 01/05/2015 ல் அப்பகுதி பொது மக்கள் மட்டுமே நினைவு கல்வெட்டு அமைத்து கொண்டாடினர். தற்போது காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மத்திய, மாநில அரசுகள் அவர் தென்னாப்பிரிக்கா விலிருந்து இந்தியா வந்து முதல் சுற்றுப் பயணமாக வருகை தந்த பொறையார், தில்லையாடி பகுதிகளில் சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதோடு, பழுதடைந்து ள்ள வள்ளியம்மை மணி மண்டபத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வருங்கால தலைமுறை யினர் அறிந்துக் கொள்ளும் வகை யில் காந்தி தங்கிய வீட்டை அரசுடை மையாக்கி பார்வைக்கு விடுவதோடு, முக்கிய பகுதிகளில் நினைவு சின்ன மாக உள்ள அந்த வீட்டிற்கு செல்லும் வழி குறித்து அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் காந்தி வருகை புரிந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.ஜான்சன் தேவநேசன்