சென்னை, ஜன.21- விடுதலைபெற்ற இந்தியாவில் ஆளுநர் பதவிக்கு என்ன மகிமை உள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் இப்பிரச்சனை யில் விவாதம் எழ வேண்டும் என வும் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த கேரள அரசின் நடவடிக்கையை விமர்சி்த்து வரும் ஆளுநருக்கு பதிலளித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் ஆளுநரின் தலையீடும், நிலைப்பாடுகளும் நியாயப்படுத்த முடியாதவை. மாநிலங்களின் உரிமைகள் குறித்து ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அரசமைப்பு சாசனத்தை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசமைப்பு சாசனம் குறித்த ஆரிப் முகம்மது கானின் விளக்கம் சரியல்ல. ஆங்கில காலனி ஆதிக்கத்தின் பகுதியே ஆளுநர் பதவி எனவும் யெச்சூரி கூறினார்.