சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம்
கோயம்புத்தூர், ஆக. 9- கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவ னத்திற்கு வழங்கக்கூடாது. அநியாய சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாநகரம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள அனைத்து இணைப்பு சாலைகளை யும் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கோவை மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து வெள்ளி யன்று மனு அளித்தனர். இதுகுறித்து பி.ஆ.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோ கத்தை அந்நிய நாட்டு சூயஸ் நிறுவ னத்திடம் வழங்கியதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகி றது. எந்த தொழிற்நுட்ப வசதி வாய்ப்பும் இல்லாத காலத்திலேயே நமது ஊழியர்கள் சிறுவாணி பகுதியில் இருந்து குழாய் பதித்து கோவை மாநக ரத்திற்கு குடிநீர் கொண்டு வந்துள் ளோம். இன்றுவரை கோவை மாநகராட் சியே மாநகர மக்களுக்கான குடிநீர் விநியோகித்தை செய்துவந்துள்ளது. இன்று நம்மிடம் பல திறமை மிக்க இளைஞர்கள், ஊழியர்கள் உள்ளனர். தொழிற்நுட்ப வசதிகளும் உள்ளன. இந்நிலையில் கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அந்நிய நாட்டு சூயஸ் நிறுவனம் வழங்கும் என கோவை மாநகராட்சி நிர்ப்பந்தம் மேற்கொண்டது மோசடியானது.
இது எதிர்காலத்தில் குடிநீருக்கு அந்நியர்களிடம் கையேந்த வைக்கும் என்பது மட்டுமல்லாமல், குடி நீருக்காக ஊதியத்தில் பெரும்பகு தியை செலவழிக்க வேண்டிய நிலை யையும் ஏற்படுத்தும். இந்த ஒப்பந் தத்தில் பொதுக்குழாய் அகற்றம், குடிநீர் கட்டணம் நிர்ணயிப்பு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தம் குறித்து திறந்த மனதுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக மாநகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதேபோல், கோவை மாநக ராட்சியில் எப்போதும் இல்லாத வகையில் சொத்து வரி உயர்வு என்பது 50 சதவிகிதம், 100 சதவிகிதம் வரை கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அரசு ஆணை என்கிற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மாநகர மக்களின் மீது பெரிய சுமையை ஏற்படுத்தியதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேற்கண்ட கோரிக்கைகளை கோவை மாநகராட்சி நிறைவேற்ற வில்லை என்றால் பொது மக்கள், வியா பாரிகள் மற்றும் அனைத்து அரசி யல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரட்டி கோவையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த திட்டமிடுவோம். முன்னதாக சிபிஎம் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள் ளிங்கிரி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.ஜெயபாலன், வி.பெரு மாள், எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் யு.கே.சிவஞானம், என்.வி.தாமோத ரன், என்.ஜாகீர், என்.ஆர்.முருகே சன் உள்ளிட்ட தலைவர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையர் பிர சன்னா ராமசாமி சந்தித்து கோரிக்கை கள் அடங்கிய மனுவை அளித்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.