tamilnadu

img

முதல்வர் நிவாரண நிதிக்கு கோவை காப்பீட்டு ஊழியர்கள் ரூ20 லட்சம் நிதி

கோவை – கொரோனா தொற்று நோய் தடுப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறைகூவலையேற்று கோவை கோட்ட காப்பீட்டு ஊழியர்கள் 20லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர். 

இதுகுறித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்ட பொதுச்செயலாளர் துளசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  

கோவிட் 19  என்ற தொற்றுநோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த வேண்டி 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மிக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எங்கெல்லாம் மனித சமூகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளகிறதோ அங்கு சென்று ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறைகூவல். இதன்ஒருபகுதியாக கோவை ,நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள எல்ஐசி அலுவலகங்களில்  பணிபுரியும் 600 மூன்றாம் நான்காம் நிலை ஊழியர்கள் இதுவரை 20 லட்சம் ரூபாய் நிதியை கொரானா  தடுப்பு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இந்த முதல்கட்ட நடவடிக்கையை தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட நடவடிக்கையை இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.