tamilnadu

img

வீடுகளுக்கே ரேசன் பொருள்: தமிழகம் கேரளத்தை பின்பற்றுமா?

மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, மார்ச் 20- தமிழக சட்டப்பேரவையில் நேர மில்லா நேரத்தில் உரையாற்றிய எதிர்க்  கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக பெரிய கடைகள், மால்  கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.  இதில் சிறிய வியாபாரிகள் பாதிக்கப்ப டாமல் இருக்க  விதிகளை தளர்த்த வேண்டும்.  சென்னையில் பாண்டி பஜார், உஸ்மான் சாலை ரங்கநாதன் சாலைக ளில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படாததால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுபோல் தினக்கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளிகளும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

எனவே கேரள மாநில அரசை போன்று ரேசன் பொருட்களை வீடுக ளுக்கு நேரடியாக சென்று வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தனியார் நிறுவனங்களில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பா டுகளை செய்ய அரசு நடவடிக்கை களை எடுக்க வேண்டும். அவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். சிறு, குறுந்தொழில் நிறு வனங்கள் மூடும் நிலை ஏற்பட்டி ருக்கிறது” என்றார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், “தமிழ்நாட்டில் இது வரைக்கும் இரண்டு லட்சம் பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்க ளில் 32 பேரை மருத்துவ மனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். அரசு எடுக்கும் நடவ டிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வில்லை.மக்கள் அச்ச உணர்வை போக்க பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணியாற்றும் அரசு அதிகாரி கள், தூய்மைப்பணியாளர், மருத்துவ  துறையை சேர்ந்த அனைவருக்கும்  நன்றியையும் தெரிவித்துக்கொள்வ தாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியில் சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட வில்லை. தொழிலாளர்கள் பாது காப்பாக பணியாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.