சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 23- சட்டப்பேரவை தலைவ ருக்கு எதிர்க் கட்சித் தலை வர் மு.கஸ்டாலின் கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில், 12 நாளில் 9 பேருக்கு கொரோனா நோய் என்பதும், 8950 பேருக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறார்கள் என்ற செய்தியும் “நோயை எதிர்கொள்ள” நமக்கு கிடைக்கும் ‘பொன் னான நேரத்தை’ வீணடிக்கி றோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு பள்ளி தேர்வு கள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ரத்து செய்துள் ளது. மத்திய அரசு அலுவல கங்களில் பி மற்றும் சி ஊழி யர்கள் 50 சதவீதம் பணிக்கு வந்தால் போதும் என்றும்- இந்த நடைமுறை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவை களை மட்டும் அனுமதிக்கு மாறு மாநில அரசுக்கு மத் திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. “தனிமைப்படுத்துவது” மட்டுமே கொரோனா நோய் தடுப்பிற்கு இன்றியமையாத ஒரே மருந்தாகும். உலகம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலை யில், தற்போது சட்டமன்றத் தில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப் பது மக்களின் பாதுகாப் பிற்கு உகந்ததாகத் தெரிய வில்லை.
பிரதான எதிர்கட்சி தலை வர் என்ற முறையில் சட்ட மன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக் கையை ஏற்காமல் “தனி மைப்படுத்திக் கொள்வோம்” என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சா ரத்திற்கு எதிராகவே கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஆகவே மக்களின் பாது காப்பு கருதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்பதால் சட்ட மன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை திமுக உறுப்பினர்கள் புறக்கணிக்கி றார்கள். இவ்வாறு ஸ்டாலின் தெரி வித்திருந்தார்.