tamilnadu

img

மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை, மார்ச் 27- கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மத்திய மாநில அரசுக ளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக  கூட்டணிக் கட்சித் தலைவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, இன்றைய நாட்டு நிலைமைகள் குறித்தும், மக்களின் தேவைகள் குறித்தும் மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் பற்றியும் நிலைமைகளை பரிமாறிக் கொண்டார்கள்.