tamilnadu

img

காவேரி சரபங்கா நீரேற்று திட்டம் - நீரோடை வழியாக செயல்படுத்துக

விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

சேலம், ஜூலை 17- காவேரி சரபங்கா நீரேற்று திட்டத்தில் விளை நிலத்தில் குழாய்கள் பதிக்காமல், நீரோடை வழியாக செயல்படுத்திட வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி  நீர் சரபங்கா திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், சங்ககிரி  வட்டம், வெள்ளாளபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து  வடுகப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப் படுகிறது. இந்த திட்டத்திற்கு குழாய் பதிப்பதற்காக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி ரகசியமாகவும், மறைமுகமாகவும் நிலம் அளவீடு செய்துள்ளனர். மேலும்,  பாப்பம்பட்டி கிராமத் தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகிறது என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  ஆகவே, இந்த திட்டத்தை விவசாய நிலம் பாதிக்காத வகை யில் வெள்ளாபுரம் ஏரியிலிருந்து நீரோடை வழியாக அக்க ரப்பட்டி குட்டை வழியாக பாப்பம்பாடி கிராமத்தில் உள்ள  புது ஏரிக்கும், கிழக்கே கசப்பேரி வழியாகவும், தெற்கே ஏகா புரம் சின்ன ஏரியில் இருந்து ஏகாபுரம் பெரிய ஏரிக்கு  நீரோடை வழியாகவே செல்ல வழித்தடம் உள்ளது. இது  சம்மந்தமாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மேலும்,  வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையினர் தங்களின் பட்டா நிலத்தில் அத்துமீறி நில அளவீடு செய்து வருவது பெரும் குற்றச்செயலாகும். எனவே, மேட்டூர் உபரி நீர் சரபங்கா திட்டத்தை நீரோடை  வழியாக செலுத்துமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி மற்றும் பாதிக் கப்பட் விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.