சென்னை, ஏப்.1- அரசின் நலத்திட்ட உதவிகளான முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை பயனாளி களின் இருப்பிடத்திற்கு சென்று நேரிடையாக வழங்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 32 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை மணியார்டர் மூலம் வழங்கப்படு கிறது. தற்பொழுது 144 தடை உத்தரவு மற்றும் ஊர டங்கு அமலில் உள்ளதால் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.