மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 7- மக்களை பாதிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020 கைவிட வேண்டு மென்று மத்திய அரசுக்கு மின்வாரிய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங் கங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு விடு த்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய தேசம் சுதந்திரம் அடைந்த பின்பு அனைத்து தொழில்களுக்கும் தாய்த் தொழிலாக இருக்கும் மின்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் மாநிலங்கள் தங்களது மக்க ளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும். மின் கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கும் அரசியல் அமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது. கடந்த 2014லிருந்து மத்திய அரசு இந்த சட்டத்தை அமலாக்க இரண்டு முறை முயற்சி செய்தும் அனைத்து மாநிலங்களும் எதிர்த்த காரணத்தால் கைவிட்டு தற்பொழுது மூன்றாம் முறயைக 2020 மின்சார சட்டத் திருத்த மசோதாவை அமலாக்க முயற்சிக் கிறது.
கடந்த 03.07.2020ல் நடந்த மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, புதுச்சேரி, சண்டிகர் என பனிரெண்டு மாநில மின்துறை அமைச்சர் களும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் என வலியுறுத்தி இந்த மசோதாவை கைவிட வேண்டுமென கூறியுள்ளார்கள். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மாநில முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர்களோடு கலந்துரையாட மத்திய மின்துறை அமைச்சர் நேரில் வரப்போவ தாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த மசோதாவை தொழிற்சங்கங்கள் எதிர்பதற்கான காரணம் என்னவென்றால் விநியோக பகுதிகளை கம்பெனிகளாக மாற்றி தனியார்மயப்படுத்தினால் மின்சாரம் சந்தை பொருளாக மாறும். வசதியுள்ள வர்களுக்கே மின்சாரம் என்கின்ற நிலை உருவாகும். அவ்வாறு உருவானால் விவசாயம். கைத்தறி, நெசவுத்தொழில், சிறு-குறு தொழில்கள் மின் கட்டணத்தால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி தொழில்கள் அழியும் நிலை ஏற்படும். மேலும் இந்த மசோதாவில் மின் கட்டணத்தை உயர்த்தவும், மாநில அரசுகளை மின் கட்டண நிர்ணயம் செய்கின்ற உரிமையையும் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களை நிர்வகிப்பதிலும் உள்ள உரிமைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்தில் 7ஆவது அட்டவணையின் கீழ் பிரிவு 246 வழங்கியுள்ள மாநிலங்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மீறுவதாக உள்ளது.
மேலும் மின் கொள்முதல், மின் விநியோ கம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தஙகளின் மீது எழும் தாவாக்கள் மத்திய அரசின் கீழ் அமைக்கப்படும் மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் ஒன்றே தீர்வு காணும் என்பது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கின்ற விதத்தில் உள்ளது என்பதோடு, அவ்வாறு அமையும் ஆணையத்தில் கூட மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பது தனியார் முதலாளிகளை மின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் எதிர்காலத்தில் முழுமையாக ஈடுபட வைப்பதற்கு உதவுகின்ற வகையில் இந்த சட்டம் உள்ளது.
மின்சார துறை என்பது சேவைத்துறை நிறுவனமாக இருக்க வேண்டும. லாப நஷ்ட கணக்கு பார்க்கும் துறையாக இது இருக்கக்கூடாது. மின்துறை சேவைத்துறை யாக இருந்த காரணத்தால் தான், தமிழ கத்தில் ஏற்பட்ட தானே, வர்தா, ஒக்கி, கஜா மற்றும் சென்னை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மின்தடை ஏற்பட்டபோது, மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் துணிச்ச லாக பணியாற்றி மின் விநியோகத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து தமிழக அரசின் மற்றும் தமிழக மக்களின் பாராட்டை பெற முடிந்தது. மகாராஷ்டிராவிலும், ஒடிசா விலும் புயலினால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்ட பொழுது என்ரான் போன்ற தனியார் கம்பெனிகள் மின் விநியோகத்தை சரி செய்ய முடியாமல் வெளியேறியது. அதன் பின்னர் அந்த மாநிலத்தில் வேறு இடங்களில் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் பல நாட்களாக செயல்பட்டு மின் விநியோகத்தை சரிசெய்தது என்பது வரலாறு. இந்த அனுபவங்களை எல்லாம் கணக்கில் கொண்டு மாநில மின்வாரியங்கள் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் மக்கள் நலன் கருதி வலியுறுத்துகிறோம்.
தற்போது தேசம் அசாதாரண சூழ்நிலை யில் உள்ள பொழுது இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த சூழலில் கேந்திரமான சேவைத் துறையான மின்துறையை தனியார்மயப்படுத்தி லாபத்தினை தனியாருக்கும், நஷ்டத்தை மின்துறைக்கும் உருவாக்க நினைக்கும் இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 ஐ மத்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய மின்துறை அமைச்சர், மாநில முதல்வர்களை நேரிடையாக சந்தித்து ஆதரவு திரட்டுவது என்பது மின்வாரிய ஊழியர்களையும், மின் நுகர்வோர்களையும் போராட்ட முனைக்கு தள்ளப்படும் சூழ்நிலையை உருவாக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசும் தன்னுடைய நிலைபாட்டில் உறுதி யாக இருந்து மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ எதிர்த்து எடுத்து வரும் நடவடிக்கை யை துரிதப்படுத்தி, தமிழக மின்வாரியத்தை பொதுத்துறையாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.