தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை,டிச.14- ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ந் தேதி வெளியிடப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2020-ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்தத்துக்கான தீவிர பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதுவரை சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23ஆம் தேதி வெளியிடப்படும். இந்த பட்டியலில் பெயர் சேர்க்கவோ, விவரங்களைத் திருத்தவோ 23-ந் தேதியிலிருந்து ஜனவரி 22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி பிப்ரவரி 3ஆம் தேதி முடிவடையும். துணைப்பட்டியல் தயாரிக்கும் பணி பிப்ரவரி 11ஆம் தேதி நடக்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.