ஜூலை 22-ல் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 18- சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலை மை அலுவலகத்தை அவதூறாக சித்த ரிக்கும் பதிவு ஒன்றை விஷ்வா என்ப வர் முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் அரசியல் சமூக தளங்களில் செயல்படும் பெண் செயல்பாட்டா ளர் ஒருவரை அவதூறு செய்யும் பதி வும் அதில் இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய கீழ்த்தரமான பதிவும் அதனுடைய பின்னூட்டங்களும் வன்மையான கண்டனத்துக்குரி யவை. இதனைக் கண்டித்து, வரும் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய அள வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தகைய பதிவுகள் வலைத்தள சுதந்திரம் அல்ல... வலைத்தள அரா ஜகம் என்பதைத் திட்டவட்டமாக சுட்டிக் காட்டுகிறோம். எங்கோ ஒரு மூலை யில் போகிற போக்கில் ஒருவர் போடும் பதிவாக இதனை பார்த்து கடந்து போய்விட முடியாது. கருத்துக்களு டன், கொள்கைகளுடன் மோத திரா ணியற்ற சக்திகளின் வழிகாட்டுத லிலோ அல்லது அத்தகைய மன நிலை கட்டமைக்கப்படுவதன் காரண மாகவோ இந்த இழி செயல் நடப்பதா கவே கருத வேண்டும். ஒரு பெண்ணை விமர்சிக்க வேண் டும் என்றால் அவரைப்பற்றி பாலியல் ரீதியான அவதூறு, ஒரு ஆணை விமர்சிக்க வேண்டுமென்றால் அவ ரது பெண் உறவினர்கள் பற்றிய கொச்சையான கருத்துக்கள் போன்ற ஆண் மேலாதிக்க கண்ணோட்டம் தான் எதிர்வினையாக வரும் என் றால், விவாதத்திற்கு வழியேது? மாற்றுக் கருத்துக்களை முன்வைப்ப வர்களோடு பொருள் பொதிந்த விவா தத்தை நடத்த வக்கற்றவர்களின் பிரச் சாரத்தை ஒட்டுமொத்த சமூகமும் நிரா கரிக்க வேண்டும். மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மதவாத அரசியலுக்கு உறுதியான எதிர்ப்பைத் தெரிவிப்ப வர்களாக இடதுசாரிகள் இருக்கிறார் கள் என்கிற காழ்ப்புணர்வும், கொரோனா எதிர்ப்பு செயல்பாட்டில் மத்திய அர சின் தோல்வியை மூடிமறைத்து திசை திருப்ப வேண்டும் என்கிற குறுகிய அரசியல் உணர்வும் தான் இத்தகைய அவதூறுகளுக்கு பின்புலமாக இருக்கிறது.
போலியான செய்திகளையும், போலியான புகைப்படங்களையும் உற்பத்தி செய்து பரப்புரை நடத்தி பலமுறை அம்பலப்பட்டவர்கள் தான் சங்பரிவார சக்திகள். ஆர்.எஸ் .எஸ்., பாஜக தங்களது அரசியல் எதிர்ப்பா ளர்கள் மீது அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், அவதூறு சேறை அள்ளித்தெளித்து வருவதை ஒரு போதும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இச்சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்திருக்கும் புகாரின் மீது கறாரான நடவடிக்கையை வலி யுறுத்தியும், இப்படியான அவதூறு கள் இடதுசாரி அரசியல் இயக்கத்தை யும், முற்போக்கு செயல்பாட்டாளர் களையும் அச்சுறுத்தி விடமுடியாது என்பதை பறைசாற்றியும் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ள இயக் கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளும் என்பதோடு ஜன நாயக அமைப்புகளும், தனிநபர் களும் கண்டனம் முழங்க முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.