tamilnadu

img

3 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை, செப். 14- பாசனத்திற்காக பாபநாசம், சேர்வ லாறு மற்றும்  மணிமுத்தாறு அணைகளி லிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கையில், பிசான பருவத்திற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க ஏதுவாக முன்கூட்டியே பாபநாசம்,  சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடு மாறு விவசாயப் பெரு மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும்  மணிமுத்தாறு அணைகளிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள  தாமிரபரணி ஆற்றின் கீழுள்ள எட்டு அணைக் கட்டுகள் மற்றும் 11 கால்வாய்கள் மூலம் பாசன வசதிபெறும் பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும் மற்றும் பிசான பருவ முன்னேற்பாடு பணிகள் செய்ய ஏதுவாகவும், சிறப்புநிகழ் வாக 15.9.2019 முதல் 4.10.2019 வரை 20 நாட்களுக்கு 2500  மில்லியன் கன அடி  தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.